தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + Three terrorists killed, cop injured in firing near toll plaza on Jammu-Srinagar highway

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு மாவட்டம் நக்ரோட்டாவில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் அதிகாலை 5 மணியளவில் லாரி ஒன்றை நிறுத்தி போலீசார்  சோதனை நடத்தினர். அப்போது அதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்,  போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக  சுட ஆரம்பித்தனர்.

இதையடுத்து போலீசாரும் திருப்பி சுட்டனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் 3 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டையில் போலீசார் ஒருவரும் காயமடைந்தார். மேலும் 4 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால்  அப்பகுதியை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

கீராநகர் எல்லை வழியே அவர்கள் ஊடுருவியிருக்கலாம் எனவும், லாரியில் ஸ்ரீநகரை நோக்கி சென்று கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
4. ஜம்மு காஷ்மீர்; எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
5. காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...