தேசிய செய்திகள்

மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு: கைதான நபருக்கு 14 நாள் காவல் + "||" + Firing on students: 14-day detention for an arrested person

மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு: கைதான நபருக்கு 14 நாள் காவல்

மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு: கைதான நபருக்கு 14 நாள் காவல்
மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கைதான நபரை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
புதுடெல்லி,

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்தினர். அவர்களை நோக்கி ஒரு வாலிபர் துப்பாக்கியால் சுட்டார். அதில் ஒரு மாணவர் காயமடைந்தார்.


அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் ‘சிறுவன்’ என்று அவர் தரப்பில் கூறப்பட்டது. அவரை நேற்று சிறார் நீதி வாரியம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் பாதுகாப்பு காவலில் வைக்க வாரியம் உத்தரவிட்டது. அவரது வயதை சரிபார்க்க எலும்பு பரிசோதனை நடத்த மருத்துவ குழுவை அமைக்குமாறு சிறார் நீதி வாரியத்தை போலீசார் கேட்டுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் அருகே, சாராயம் விற்பதை தட்டிக்கேட்டவர்கள் மீது கும்பல் துப்பாக்கி சூடு - குண்டு பாய்ந்து 3 பேர் காயம்
வேலூர் அருகே சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 3 பேர் காயமடைந்தனர்.
2. மாவட்டம் முழுவதும் 358 வழக்குகள் பதிவு; 412 பேர் கைது
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள 144 தடை உத்தரவை மீறியதாக 358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்: தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் அறிவிப்பு
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கூறி வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அவரது கைது தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கி சூடு: இந்திய ராணுவம் பதிலடி
பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடித்தது.
5. சென்னையில் பயங்கரம் பாலியல் துன்புறுத்தல் செய்து 10 வயது சிறுமி கொலை 2-வது மாடியில் இருந்து கீழே வீசிய தொழிலாளி கைது
10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து 2-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.