12 நேரமாக கசியும் வாயு:கிராம மக்கள் பீதி- வெளியேற்றம்


12 நேரமாக  கசியும் வாயு:கிராம மக்கள் பீதி- வெளியேற்றம்
x
தினத்தந்தி 3 Feb 2020 5:56 AM GMT (Updated: 3 Feb 2020 9:29 AM GMT)

ஆந்திராவில் 12 நேரமாக வாயு கசிந்து வருவதால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர். அவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கோதாவரி

ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான கேஸ் தயாரிப்பு நிறுவனம்  ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உப்பிடி கிராமத்தில் இயங்கி வருகிறது. அங்கு கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக வாயு கசிந்து வருகிறது. இதனால்  பாதுகாப்பு கருதி கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க உப்பிடி கிராமத்தில் மின்சாரம் மற்றும் செல்போன் டவர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை அருகில் உள்ள முகாம்களில்  மாவட்ட நிர்வாகம் தங்க  வைத்துள்ளது.

பயங்கர ஓசையுடன் பைப் லைனில் இருந்து வெளியேறும் வாயுவை நிறுத்த ஓ.என்.ஜி.சி. நிபுணர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  

கடந்த 2 நாட்களாக புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. திடீரென கேஸ் பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் அடிக்கடி இதுபோன்ற கேஸ் கசிவு ஏற்படுவதாகவும் இதனால் எந்த நேரத்தில் எங்கு கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story