தேசிய செய்திகள்

லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு + "||" + Low intensity earthquake hits Ladakh

லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு

லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு
காஷ்மீரின் லடாக்கில் மிதஅளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
லே,

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேச பகுதிகளாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிக்கப்பட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

யூனியன் பிரதேச பகுதியான லடாக்கில் இன்று காலை 11.25 மணியளவில் மிதஅளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

இதுபற்றி அமெரிக்க வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்நிலநடுக்கம் தஜிகிஸ்தானின் வடகிழக்கே 34 கி.மீ. தொலைவில் ரோஷ்த்கால் பகுதியில் மையம் கொண்டிருந்தது என தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஷ்காரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
சத்தீஷ்காரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.
2. சேலம் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எளிதான வாழ்க்கை குறித்து 1 லட்சம் கருத்துகள் பதிவு
சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எளிதான வாழ்க்கை குறித்து 1 லட்சம் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார்.
3. ஈரான் எல்லையில் நிலநடுக்கம்; துருக்கியில் 7 பேர் பலி
ஈரான் எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு துருக்கியில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
4. அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு
அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. போலீசாரின் வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரேநாளில் 1,620 வழக்குகள் பதிவு
போலீசாரின் வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரேநாளில் 1,620 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீசார் ெதரிவித்தனர்.