தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து கேரளா வந்த வாலிபர் திருமணம் தள்ளிவைப்பு + "||" + Kerala youth from China postponing marriage

சீனாவில் இருந்து கேரளா வந்த வாலிபர் திருமணம் தள்ளிவைப்பு

சீனாவில் இருந்து கேரளா வந்த வாலிபர் திருமணம் தள்ளிவைப்பு
சீனாவில் இருந்து கேரளா வந்த வாலிபரின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.
திருச்சூர்,

கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் சீனாவில் உள்ள இவூ நகரில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். அவர், தனது திருமணத்திற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கேரளாவிற்கு வந்தார். இந்த தகவல் கடந்த 3-ந் தேதி தான் மாநில சுகாதாரத்துறைக்கு தெரியவந்தது. உடனே மருத்துவத்துறை அதிகாரிகள் அந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்தனர்.


மேலும், 28 நாட்களுக்கு அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கூடாது என்றும், வீட்டிலேயே தனி அறையில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். இதனால் நேற்று முன்தினம் கதங்கோடு கிராம பஞ்சாயத்தில் அந்த இளைஞருக்கு நடக்க இருந்த திருமணம் அவருடைய குடும்பத்தினரால் தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆனால் அதில் மணமகனுக்கு பதிலாக அவருடைய தாயார் மணமகளுக்கு மாலை சூட்டினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பு: முதல் முறையாக அறிக்கை வெளியிட்ட சீனா
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சீனா முதல் முறையாக அறிக்கை வெளியிட்டு உள்ளது.
2. சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை
சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.
3. சீனாவிடம் வாங்கிய கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் தரமற்றவை - ஐரோப்பிய நாடுகள் ‘பகீர்’ குற்றச்சாட்டு
சீனாவிடம் வாங்கிய கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என்று ஐரோப்பிய நாடுகள் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளன.
4. சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 4 ஆயிரம் பேர் பாதிப்பு
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஷிகூ நகரில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. எந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் 1300 பேருக்கு கொரோனா பாதிப்பு
எந்த அறிகுறிகளும் இல்லாமல் 1,300 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...