குடியுரிமைச் சட்ட விளைவுகள் ரஜினிக்கு தெரிந்திருந்தால் தனது நிலைப்பாட்டை மாற்றி இருப்பார்- மு.க.ஸ்டாலின்


குடியுரிமைச் சட்ட விளைவுகள் ரஜினிக்கு தெரிந்திருந்தால் தனது நிலைப்பாட்டை மாற்றி இருப்பார்- மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 6 Feb 2020 8:20 AM GMT (Updated: 6 Feb 2020 8:20 AM GMT)

நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமைச் சட்டத்தில் உள்ள கஷ்டங்களை தெரிந்துகொண்டால் தனது கருத்தை மாற்றிக் கொள்வார் என நம்புவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னையை அடுத்த கோவளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  மக்களிடம்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  கையெழுத்து பெற்றார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும், போராடும் முன் மாணவர்கள் சிந்தித்து முடிவெடுக்கவும் ரஜினி அறிவுறுத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின்  குடியுரிமை திருத்த சட்டத்தால், ஏற்படும் கொடுமைகள், கஷ்டங்களை, முதலில் ரஜினிகாந்த் தெரிந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. குடியுரிமைச் சட்டத்தின் பாதிப்புகளை ஆய்வு செய்து ரஜினி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

ஒருவேளை அதன் விளைவுகள் ரஜினிக்கு தெரிந்திருந்தால், தனது நிலைப்பாட்டை அவர் மாற்றி இருப்பார்.

இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் துரோகம் இழைக்கும், சிஏஏ, என்ஆர்சி,என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராக மற்ற மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் இயற்றப்பட்டது போல், தமிழகத்திலும், நிறைவேற்ற வேண்டும் என கூறினார்

Next Story