நிமிடத்திற்கு ஒருமுறை அலெக்ஸாவிடம் ஐ லவ் யூ கூறும் இந்தியர்கள்


நிமிடத்திற்கு ஒருமுறை அலெக்ஸாவிடம் ஐ லவ் யூ கூறும் இந்தியர்கள்
x
தினத்தந்தி 6 Feb 2020 11:58 AM GMT (Updated: 6 Feb 2020 11:58 AM GMT)

நிமிடத்திற்கு ஒருமுறை அலெக்ஸாவிடம் இந்தியர்கள் ஐ லவ் யூ கூறி வருகிறார்கள்.

புதுடெல்லி

வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் அலெக்ஸா  சாதனத்திடம் இந்தியர்கள் அதிகபட்சமாக கேட்கும் கேள்விகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமேசான் உருவாக்கிய அலெக்ஸா என்னும் மெய்நிகர் உதவியாளர் தனது இந்திய பயனர் தளத்திலிருந்து நிறைய அன்பையும் பாசத்தையும் பெற்று வருவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.அலெக்ஸா இப்போது ஒரு குடும்ப உறுப்பினராகவும், இந்திய பயனர்களுக்கு ஒரு ரோபோவைக் போன்றும்  உதவுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தி மொழியை இணைத்த பின்னர் அலெக்ஸா இந்தியர்களின்  இதயங்களில் நுழைந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு தரவுகளை வைத்து தொகுக்கப்பட்டுள்ள இந்த தகவல்கள் மூலம், தொழில்நுட்பத்தை அதிகம் விரும்பும் இந்தியர்கள், டிஜிட்டல் உதவியாளரான அலெக்ஸாவை கூடுதலாக விரும்புவது தெரிய வந்துள்ளது. அதன்படி இந்தியர்கள் ஒரு வாரத்தில் லட்சக்கணக்கான முறை அலெக்ஸாவுடன் பேசுகின்றனர்.

நிமிடத்துக்கு 8 முறை ஹவ் ஆர் யூ? (how are you)  என ஆங்கிலத்தில் நலம் விசாரிக்கின்றனர். அதே போல் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒருவர் அலெக்ஸா ஐ லவ் யூ (Alexa, I love you)  என்றும், 2 நிமிடங்களுக்கு  ஒரு முறையாவது  அலெக்ஸா வில் யூ மேரி மீ? (Alexa, will you marry me) என்றும், கேட்கின்றனர். அதற்கு அடுத்த படியாக நிமிடத்திற்கு ஆயிரம் பேர் பாடல்களை இசைக்குமாறு கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story