நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவது தொடர்பாக சிறை நிர்வாகத்தின் மனு தள்ளுபடி


நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவது தொடர்பாக சிறை நிர்வாகத்தின் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 7 Feb 2020 10:50 AM GMT (Updated: 7 Feb 2020 11:40 AM GMT)

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவது தொடர்பாக சிறை நிர்வாகத்தின் மனுவை கூடுதல் செசன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

‘நிர்பயா’ வழக்கு தொடர்பாக  நேற்று டெல்லி சிறைத்துறை தரப்பில் டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கில் போடுவதற்கான புதிய தேதி ஒன்றை அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, கூடுதல் செசன்ஸ் நீதிபதி தர்மேந்தர் ராணா முன்னிலையில் நேற்று விசாரிக்கப்பட்டது. விசாரணை தொடங்கியதும், குற்றவாளிகள் நால்வருக்கும் இந்த மனுவின் மீது பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு விசாரிப்பதாக கூறி, நீதிபதி தள்ளிவைத்தார். 

இந்நிலையில், இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி தர்மேந்தர் ராணா முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவது தொடர்பான சிறை நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் 7 நாள் அவகாசத்திற்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story