கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு


கொரோனா வைரஸ்  பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு
x

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்த்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

சீனா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.  இந்த நிலையில், சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்து. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட 3 கொரோனா வைரஸ் பாதிப்பும் இவை மட்டுமே. இதையடுத்து,  கடந்த திங்கள் கிழமையன்று கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

இந்த நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களில்  யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாததால், திங்கள் கிழமை அறிவிக்கப்பட்ட மாநில பேரிடரை தளர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது

இதுதொடர்பாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறும்போது, ”பரிசோதனை முடிவுகள் நிலைமை மேம்பட்டுள்ளதைக் காட்டுகின்றன, இருப்பினும் நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். கொரோனாவை தடுப்பதற்கான எச்சரிக்கை வழிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.  சீனாவில் இருந்து வந்தவர்கள் தொடர்ந்து தங்கள் உடல் நிலை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்”என்றார்.

Next Story