தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி + "||" + Delhi: Chief Minister Arvind Kejriwal along with his family casts his vote at a polling booth in Civil Lines

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
புதுடெல்லி,

70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தன் மனைவி மாலா பைஜாலுடன் கிரேட்டர் கைலாஷில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ், பாஜக சார்பில் ஷிகா ராய், காங்கிரஸ் சார்பில் சுக்பீர் பவார் ஆகியோர் களத்தில் உள்ளனர். 

அதேபோல், சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில்  டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், “  அனைவரும் தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். குறிப்பாக பெண்கள் வாக்களிக்க தவறக்கூடாது.  செய்த பணிகள் அடிப்படையில் டெல்லி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.  மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.