தேர்தல் தோல்வி எதிரொலி: டெல்லி பா.ஜனதா தலைவர் பதவி விலக முடிவு


தேர்தல் தோல்வி எதிரொலி:    டெல்லி பா.ஜனதா தலைவர் பதவி விலக முடிவு
x
தினத்தந்தி 12 Feb 2020 11:38 PM GMT (Updated: 12 Feb 2020 11:38 PM GMT)

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் மனோஜ் திவாரி பதவி விலக முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. பா.ஜனதா கட்சியால் வெறும் 8 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் மனோஜ் திவாரி பதவி விலக முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு தனது விருப்பத்தை தெரிவித்து உள்ளார்.

மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை நேற்று அவர் நடத்தினார். அதில் அவர் பேசும்போது, ‘சட்டசபை தேர்தலில் நாம் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இது குறித்து நாம் ஆய்வு செய்வோம். சில நேரங்களில் நாம் எதிர்பார்த்தது போல முடிவுகள் அமையாதபோது அது நம்மை பாதிக்கிறது. ஆனால் யாரும் விரக்தியடைய வேண்டாம் என நான் நமது தொண்டர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 2015-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும்போது, நமது வெற்றி சதவீதம் அதிகரித்து இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

Next Story