மராட்டியத்தில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் வேலை


மராட்டியத்தில்   அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் வேலை
x
தினத்தந்தி 12 Feb 2020 11:43 PM GMT (Updated: 12 Feb 2020 11:43 PM GMT)

மராட்டிய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாட்கள் என்ற அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது.

மும்பை, 

மத்திய அரசு ஊழியர்களை தவிர, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாள் பணி செய்யும் நடைமுறை உள்ளது.

இந்த மாநிலங்களை போல மராட்டியத்திலும் 5 நாள் வேலை நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில், மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் பதவி ஏற்று உள்ள புதிய கூட்டணி அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து உள்ளது.

இதன்படி மராட்டிய அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாட்கள் என்ற அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. இந்த புதிய நடைமுறை வருகிற 29-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் பணி நேரம் 30 நிமிடங்கள் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இனி மாநிலம் முழுவதும் காலை 9.45 மணி முதல் மாலை 6.15 மணி வரை பணி நேரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story