தேசிய செய்திகள்

பிரிவினைவாத தலைவர் உடல்நிலை குறித்த வதந்தி; காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம் + "||" + Internet services snapped in Kashmir after rumours surrounding Geelani’s health

பிரிவினைவாத தலைவர் உடல்நிலை குறித்த வதந்தி; காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்

பிரிவினைவாத தலைவர் உடல்நிலை குறித்த வதந்தி; காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்
பிரிவினைவாத தலைவர் உடல்நிலை குறித்த வதந்திகளைத் தொடர்ந்து காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த  ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.  ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும்  பிரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து  வதந்திகள் பரவி வன்முறை ஏற்படக்கூடாது என்பதற்காக ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதள சேவைகள், தொலைபேசி இணைப்புகள் ஆகியவை முடக்கப்பட்டன. சமீபத்தில் தான்  படிப்படியாக  இணையதள சேவைகள், தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் இணைய தள சேவை  முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர்  சையத் அலி ஷா ஜீலானியின் உடல்நலம் குறித்த வதந்திகள் பரவியது. 90 வயதான ஜீலானியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சில சமூக ஊடக பதிவுகளில் வதந்தி பரவியது. இதையடுத்து புதன்கிழமை இரவு   இணைய தள சேவைகள், மொபைல் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றவாளிகள் எந்தவொரு கலவரத்திலும் ஈடுபடாமல்  தடுக்கவும் காஷ்மீரில் பதற்றம் நிறைந்த  பகுதிகளில் போதுமான அளவு பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

ஜீலானி  சில ஆண்டுகளாக  உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார் ஆனால் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என  அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர் ; என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
2. ஜம்மு காஷ்மீரில் விபிஎன் மூலமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் தடையை மீறி விபிஎன் மூலமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. ஜம்மு காஷ்மீர் ; முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டது பயணத்திற்குப் பிறகு தூது குழுவினர் மகிழ்ச்சி
ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டது என பயணத்திற்குப் பிறகு தூதர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
5. ஜம்மு காஷ்மீர் ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் பலி
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.