வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்களை இணையத்தில் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


வேட்பாளர்களின் குற்ற பின்னணி  விவரங்களை இணையத்தில்  வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம்  கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 13 Feb 2020 7:57 AM GMT (Updated: 13 Feb 2020 7:57 AM GMT)

வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை  கட்சியின் இணைய தளம் மற்றும்  சமூக வலைதளங்களில் வெளியிடவேண்டும் என சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டுள்ளது. 

பா.ஜனதாவை  சேர்ந்த  அஸ்வினி குமார் உபத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவை  விசாரித்த சுப்ரீம் கோர்ட் 

சட்டமன்ற, நாடாளுமன்ற  வேட்பாளர்களின் குற்றவிவரங்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும். மனுதாக்கலுக்கு 20 நாட்களுக்கு  முன்னதாக இணையத்திலும் பத்திரிகையிலும் வெளியிட வேண்டும் வெற்றி பெறுவார் என்பது மட்டுமே ஒரு வேட்பாளருக்கான தகுதி அல்ல. 

வெற்றி வாய்ப்பை தாண்டி, குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட காரணங்களையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுப்ரீம் கோர்ட்  குற்றப் பின்னணியை அளிக்க தவறும் கட்சிகள் தொடர்பாக தகவல் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

Next Story