தேசிய செய்திகள்

தவறான தொடர்பை தட்டிக் கேட்ட மனைவியை நடு ரோட்டில் வைத்து தாக்கிய போலீஸ் அதிகாரி + "||" + Indian Cop Thrashes Wife For Objecting to His Alleged Extramarital Affair

தவறான தொடர்பை தட்டிக் கேட்ட மனைவியை நடு ரோட்டில் வைத்து தாக்கிய போலீஸ் அதிகாரி

தவறான தொடர்பை தட்டிக் கேட்ட மனைவியை நடு ரோட்டில் வைத்து  தாக்கிய போலீஸ் அதிகாரி
தவறான தொடர்பை தட்டிக் கேட்ட மனைவியை நடுரோட்டில் இழுத்துப் போட்டுத் தாக்கிய போலீஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
போபால்

மத்தியப் பிரதேச மாநிலம் தார் நகரில் உள்ள காந்த்வானி போலீஸ்  நிலைய பொறுப்பாளர் நரேந்திர சூர்யவன்ஷி  அவர் தனது மனைவியை நடுத்தெருவில் தாக்கும்  வீடியோ வைரலாகி உள்ளது.

பிப்ரவரி 11, 2020 அன்று படமாக்கப்பட்ட ஒரு வீடியோவில், சூரியன்ஷி தனது மனைவியின் தலைமுடியை இழுத்து அடித்து உதைக்கிறார்  அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தடுக்க முயன்ற போதும் அவர் அடிப்பதை நிறுத்தவில்லை.

நரேந்திராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு உள்ளதாகவும், அதனை தட்டிக்கேட்டதால் அவர் மனைவியை தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

நரேந்திர சூர்யவன்ஷி  தனது மனைவியை தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.  அவர் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. குழந்தையை இழுத்து செல்ல முயலும் குரங்கு வைரலாகும் வீடியோ
குரங்கு ஒன்று குழந்தையை இழுத்து செல்ல முயலும் வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
2. வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் நடனம்?
இந்தி பாடல் ஒன்றுக்கு இந்திய ராணுவ வீரர் ஆடிய நடன வீடியோ வைரலாகி உள்ளது?