தேசிய செய்திகள்

பா.ஜனதாவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ் + "||" + delhi election results people kept away bjps divisive politics says mallikarjun kharge

பா.ஜனதாவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்

பா.ஜனதாவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்
பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

டெல்லி தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: 

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால், மதம், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள், பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் மேற்கொண்ட பிரசாரம், அவர்களது கட்சி கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரசாரம் செய்தும், அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது. பா.ஜனதாவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை.

காங்கிரசின் தோல்வி குறித்து நாங்கள் எங்கள் கட்சியின் செயற்குழுவில் சுயபரிசோதனை செய்வோம். தவறு எங்கு நடந்தது என்பது குறித்தும் நாங்கள் ஆராய்வோம். சில நேரங்களில் வளர்ச்சி அரசியல் எடுபடுகிறது. வேறு சில நேரங்களில் உணர்வு பூர்வமான விஷயங்கள் மற்றும் பொய் வாக்குறுதிகளின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்கிறார்கள். நான் 55 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். 48 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கிறேன்” இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. "டெல்லி தேர்தலுக்கு முன் பேச வேண்டிய 3 விஷயங்கள்" -மோடிக்கு ப.சிதம்பரத்தின் ஆலோசனை
பிரதமர் மோடி டெல்லி தேர்தல் பிரசாரத்தில் மூன்று விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
2. மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.