தேசிய செய்திகள்

டிரம்ப் வருகைக்கு எதிராக கம்யூனிஸ்டு போராட்டம் - சீதாராம் யெச்சூரி அறிவிப்பு + "||" + Communist Struggle Against Trump Arrivals - Sitaram Yechury Announcement

டிரம்ப் வருகைக்கு எதிராக கம்யூனிஸ்டு போராட்டம் - சீதாராம் யெச்சூரி அறிவிப்பு

டிரம்ப் வருகைக்கு எதிராக கம்யூனிஸ்டு போராட்டம் - சீதாராம் யெச்சூரி அறிவிப்பு
டிரம்ப் வருகைக்கு எதிராக கம்யூனிஸ்டு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.
புவனேசுவரம், 

அமெரிக்க அதிபர்  டிரம்ப் பிப்ரவரி 24 மற்றும் 25-ம் தேதிகளில் டிரம்ப இந்தியா வரவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிரம்ப்   டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு  செல்கிறார்.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்தித்து பேசுகிறார். 

24 மற்றும் 25-ந்தேதிகளில் டிரம்ப் செல்லும் இடங்களில் அவருக்கு எதிராக கம்யூனிஸ்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவார்கள். டெல்லி அல்லது குஜராத்தில் கட்சி தொண்டர்கள் கண்டிப்பாக போராட்டம் நடத்துவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.