தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? ராகுல் காந்தி கேள்வி + "||" + "Who Benefited Most?": Rahul Gandhi's 3 Questions On Pulwama Anniversary

புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? ராகுல் காந்தி கேள்வி

புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? ராகுல் காந்தி கேள்வி
புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,

கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், வீரர்களின் உயிர்த்தியாகத்தை பல்வேறு தரப்பினரும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

புல்வாமா தாக்குதலின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் காங்கிரஸ்  எம்.பி ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; - புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் உயிர்த்தியாகத்தை இன்று நாம் நினைவு கூர்கிறோம்.  

அதே நேரத்தில் நாம் எழுப்பும் கேள்விகள் என்னவெனில், ” இந்த தாக்குதலால் அதிகம் பயனடைந்தது யார்? தாக்குதல் தொடர்பாக விசாரணையில் வெளிவந்த விஷயம் என்ன? இந்த தாக்குதல் நடப்பதற்கான பாதுகாப்பு குறைபாட்டிற்கு பா.ஜ.க அரசில் பொறுப்பேற்க போவது யார்?” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கலவரம்- அமித்ஷா பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
2. காங்கிரசில் என்ன தான் நடக்கிறது...? ராகுல்காந்தி தலைவராவாரா...? மாட்டாரா...?
காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து தலைமை காங்கிரசுக்குள் பல மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
3. ராணுவ உயர் பதவி அளிக்க மறுப்பதா? பெண்களை அவமரியாதை செய்கிறது, மத்திய அரசு ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெண்களை மத்திய அரசு அவமரியாதை செய்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
4. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மரியாதை
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மரியாதை செலுத்தினார்.
5. எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அழிக்க விடமாட்டோம் -ராகுல் காந்தி உறுதி
எஸ்.சி., எஸ்.டி. சமுதாயத்தினருக்கான வேலை மற்றும் பதவி உயர்வில் உள்ள இடஒதுக்கீட்டை அழிக்க விடமாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.