தேசிய செய்திகள்

காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றி திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி + "||" + Husband was going to celebrate Valentine's Day with girlfriend, wife caught red-handed on the beach

காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றி திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி

காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றி திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி
பீகாரில் காதலர் தினத்தை காதலியுடன் கொண்டாடிய தனது கணவரை மனைவி கையும் களவுமாக பிடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
பாட்னா,

பிப்ரவரி 14ம் தேதியை உலகம் முழுவதும் பல நாடுகள் வாலண்டைன்ஸ் டே என்று காதலர் தினமாகக் கொண்டாடி வருகிறது.  இந்த காதலர் தினத்தில்  ரோஜாக்கள், சாக்லேட்கள், பரிசுப்பொருட்கள் என்று காதலர்கள் தங்களது காதல் அன்பை ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொள்கின்றனர்.

இந்த நிலையில், காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய கணவரை மனைவி கையும் களவுமாக பிடித்துள்ள சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. 

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி உடனடியாக அவரை பின் தொடர்ந்து விரட்டினார்.  ஒரு கட்டத்தில் கணவரை பிடித்த மனைவி,  தான் காதலியுடன் சுற்றி திரிவதை மனைவி கண்டுபிடித்த அதிர்ச்சியில் கணவர் உறைந்து போனார். 

ஒரு பக்கம் காதலி, ஒரு பக்கம் மனைவி என்று பொறியில் சிக்கிய எலியாக கணவர் தவிக்க, அந்த இடத்திலேயே அவரை வார்த்தைகளால் மனைவி அர்ச்சனை செய்துள்ளார். சாலையில் களபேரம் நடப்பதை அறிந்த போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

போலீசாரிடம் அந்த மனைவி கூறுகையில்,  கடந்த 3  ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. பின்னர்  அவர் தன்னை மாற்றிக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

கணவரிடம் விசாரணை நடத்திய போலீசார், இன்று காதலர் தினம் என்பதால் தனது காதலியை வெளியே அழைத்துச் சென்றேன் என்று கூறினார். இந்த விவகாரம் தீராத நிலையில், மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கணவர் - மனைவி இருவரும் சமாதானப் போக்கிற்கு வரவில்லை என்றால், மனைவியின் புகாரின் அடிப்படையில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.