தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் ; முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு + "||" + Shah Faesal booked under PSA

ஜம்மு காஷ்மீர் ; முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் ; முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா  பைசல் மீது  பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், 

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவருமான ஷா பைசல்  மீது  சர்ச்சைக்குரிய பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த வித விசாரணையும் இன்றி ஓராண்டு வரை, சிறையில் அடைக்க முடியும். 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்த பைசல், மீது நேற்று இரவு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 6 -ஆம் தேதி, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகளான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டனர். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவு, இஸ்தான்புல் செல்ல விருந்த பைசலை,  டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்து ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பியிருந்தனர்  என்பது நினைவு கூரத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
2. ஜம்மு காஷ்மீர்; எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
3. காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. ஜம்மு காஷ்மீர் ; என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
5. ஜம்மு காஷ்மீரில் விபிஎன் மூலமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் தடையை மீறி விபிஎன் மூலமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.