தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி? + "||" + Delhi has come from China 17 Coronavirus Symptoms?

சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?

சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?
சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியபட்டு உள்ளது.
புதுடெல்லி

சீனாவின் ஹுபே  மாகாணத்தில் இருக்கும் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  கொரோனா  கொடிய வைரஸ் மக்களிடம் பரவ துவங்கியது.

இந்த நோய் தற்போது நாள் தோறும் தீவிரமடைந்து வருகிறது. இந்த் கொடிய நோய்  1500 பேரின் உயிரை பலி வாங்கியுள்ளது. சீனா மட்டுமின்றி உலகின் 30 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இருப்பதால், அதை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 1631பேர்  உயிரிழந்துள்ளனர். இந்த உயிர்கொல்லி வைரஸால் 67000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில்  இருந்து இந்தியா வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு  உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த 17 பேரும் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டு இருப்பதாக  சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி நிஜாமுதீன் கூட்டம் : 9 ஆயிரம் பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைபடுத்தப்பட்டனர்
டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்ட 9 ஆயிரம் பேரையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது
2. கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிட தடை
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சீன நகரமான ஷென்சென்னில் நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிட தடை விதித்துள்ளது.
3. ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன? விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி
ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன என விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி விடுத்து உள்ளனர்.
4. கொரோனா பாதிப்புக்கு காச நோய் பி.சி.ஜி தடுப்பூசி ஒரு கேம் ஜேஞ்சராக இருக்கும்- இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை
கொரோனா பாதிப்புக்கு காச நோய் பி.சி.ஜி தடுப்பூசி ஒரு கேம் ஜேஞ்சராக இருக்கும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இந்திய விஞ்ஞானிகளுக்கும் நம்பிக்கை உள்ளது ஆனால் எச்சரிக்கையுடன் உள்ளனர்.
5. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி - பாகிஸ்தான் ஊடகங்கள்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி அடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறி உள்ளன.