அமெரிக்க ஜனாதிபதி வருகை: டிரம்ப் அனுப்பிய பாகற்காயை மோடி ஒரு இனிப்பாக மாற்றுவார் - சிவ சேனா


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 15 Feb 2020 11:29 AM GMT (Updated: 15 Feb 2020 11:29 AM GMT)

அமெரிக்க ஜனாதிபதி வருகையின் போது டிரம்ப் அனுப்பிய பாகற்காயை மோடி ஒரு இனிப்பாக மாற்றுவார் என முன்னாள் கூட்டாளி சிவ சேனா கூறி உள்ளது.

புதுடெல்லி:

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்பின் இந்திய  பயணத்தை மிகப்பெரிய வெற்றி பயணமாக அமைய ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் கூட்டாளியான சிவசேனா வளரும் நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியாவை  அகற்றியதன் மூலம். அமெரிக்கா  இந்தியாவை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது என்று கூறி  உள்ளது.

சிவ சேனா தனது கட்சி பத்திரிகையான   'சாமனா'வில் வெளியிட்டு உள்ள  தலையங்கத்தில், ஜனாதிபதி டிரம்ப்பின் வருகைக்கு முன்னதாக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி (யு.எஸ்.டி.ஆர்) சமீபத்தில் இந்தியாவை வளரும் நாடு பட்டியலில் இருந்து விலக்கிக் கொண்டது, இது ஒரு நல்ல வளர்ச்சி அல்ல என குறிபிட்டு உள்ளது

சாமனாவில் வெளியிட்டு உள்ள கட்டுரையில் டிரம்ப் நிர்வாகம் ஒரு 'கூக்லி' வீசியுள்ளது. இந்தியா இப்போது வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு. இது இந்தியாவுக்கு ஒரு பெரிய நெருக்கடி. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தூய்மை மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற அளவுருக்கள் மீது வளர்ந்த நாடுகளின் நிலையிலிருந்து இந்தியா மைல் தொலைவில் உள்ளது.

இந்தியா ஒரு வளர்ந்த நாடு அல்ல, இப்போது அது ஒரு வளரும் தேசத்திற்கு கிடைக்கும் நன்மைகளைப் பெறாது.  பிரதமர் நரேந்திர மோடியை  ஒரு வழியைக் கண்டுபிடிப்பார், மேலும் டிரம்ப் அனுப்பிய பாகற்காயை ஒரு இனிப்பாக மாற்றுவார் என கூறி உள்ளது.

Next Story