தேசிய செய்திகள்

திருமண வரவேற்பில் இரைச்சல் இசைக்கச்சேரி: மாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு + "||" + Telangana bridegroom dies during wedding procession

திருமண வரவேற்பில் இரைச்சல் இசைக்கச்சேரி: மாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு

திருமண வரவேற்பில் இரைச்சல் இசைக்கச்சேரி:  மாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு
தெலுங்கனாவில் திருமண வரவேற்பில் இரைச்சல் இசைக்கச்சேரியால் மாப்பிள்ளை திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
ஐதராபாத்,

தெலுங்கான மாநிலம்  நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதன் நகரில்  நடைபெற்ற திருமண வரவேற்பின் போது இசைக்கப்பட்ட இசைக்கச்சேரியின் போது மாப்பிள்ளை கணேஷுக்கு (வயது 25) உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருமண வரவேற்பு முடிந்து, திருமணம் நடந்த பிறகு வெள்ளிக்கிழமை திடீரென கணேஷ் மயக்கமடைந்து விழுந்தார்.  உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கணேஷின் பெற்றோர் கூறுகையில், திருமண வரவேற்பின் போது அதிகமான அளவில் இசைக்கப்பட்ட  இரைச்சல் கச்சேரியினால் அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டதாகவும், அதன் பிறகுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இசைக் கச்சேரியால் மாப்பிள்ளை மரணம் அடைந்திருப்பது உறவினர்கள், மணமகள் குடும்பத்தார் மத்தியில்  சோகத்தை ஏற்படுத்தியது.