தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை + "||" + PM Modi wishes CBSE ‘exam warriors’, asks them to be happy

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
பொதுத்தேர்வை மகிழ்ச்சியோடும், மன அழுத்தமின்றியும் எதிர்கொள்ளுங்கள் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
புதுடெல்லி,

10 மற்றும் 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று (பிப்.15) தொடங்கியுள்ளன. இதில் 10-ம் வகுப்புத் தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்புத் தேர்வை  சுமார் 12 லட்சம் பேர் எழுத உள்ளனர். 10-ம் வகுப்புக்கு மார்ச் 20 ஆம் தேதி வரையும், 12-ம் வகுப்புக்கு மார்ச் 30-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன. 

இந்நிலையில் தேர்வெழுதும் மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

இன்று 10, 12-ம் வகுப்புக்கு சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கியுள்ளன. அனைத்து இளம் வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு என்னுடைய அன்பு வாழ்த்துகள்.

என்னுடைய இளம் நண்பர்களே, மகிழ்ச்சியோடும் மன அழுத்தம் இல்லாமலும் தேர்வை எதிர்கொள்ளுங்கள். மாதக்கணக்கான கடின உழைப்பு மற்றும் முன் தயாரிப்பு உங்களை அதிக உயரத்துக்கு இட்டுச் செல்லும் என பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ‘ஹால்டிக்கெட்’டுடன் முக கவசம்
தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ‘ஹால்டிக்கெட்’டுடன் முக கவசம் வழங்கப்பட்டது.
2. கொரோனா பாதிப்பு உள்ள பகுதி: மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தனி அறை- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.