தேசிய செய்திகள்

பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்தது; 4 மாணவர்கள் உடல் கருகி சாவு + "||" + The school van was set on fire; 4 students die physically

பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்தது; 4 மாணவர்கள் உடல் கருகி சாவு

பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்தது; 4 மாணவர்கள் உடல் கருகி சாவு
பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்ததில் 4 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சண்டிகர், 

பஞ்சாப் மாநிலத்தில் சங்ரூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. நேற்று பள்ளிக்கூடம் முடிந்ததும், 12 மாணவ, மாணவிகள் வேனில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். வழியில் திடீரென அந்த வேன் தீப்பிடித்து எரிந்தது. வேனில் உள்ளே அமர்ந்து இருந்த குழந்தைகள் பயத்தில் “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அலறித் துடித்தனர். வேனை நிறுத்தி விட்டு டிரைவர், கதவைத் திறந்து விட முயன்றார். ஆனால் திறக்க முடியவில்லை.

இதற்கிடையே குழந்தைகளின் அபயக் குரல் கேட்டு அக்கம், பக்கத்து வயல்வெளியில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் விரைந்து சென்றனர். தீயை அணைத்து மாணவர்களைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதில் 8 குழந்தைகளையே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. 4 குழந்தைகள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அவர்கள் 10 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதுகுறித்து நீதி விசாரணை நடத்த முதல்-மந்திரி அமரிந்தர் சிங் உத்தரவிட்டு இருக்கிறார். “இது சோகமான சம்பவம். இதற்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று அவர் ‘டுவிட்டரில்’ குறிப்பிட்டு இருக்கிறார்.