தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை + "||" + Delhi: Final test reports of all 406 people who travelled from Wuhan, China found negative

சீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

சீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை
சீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை உகானில் அமெரிக்க பெண் மற்றும் ஜப்பானிய ஆண் என வெளிநாடுகளை சேர்ந்த 2 பேர் பலியாகி உள்ளனர்.  இதேபோன்று, பிலிப்பைன்ஸ் தீவில் சீனர் ஒருவர் மற்றும் ஹாங்காங் நாட்டில் ஒருவர் என சீனாவை தவிர்த்து வெளிநாடுகளில் இருவர் பலியாகினர்.

இதனிடையே, இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஒரே நாளில் 142 பேர் மரணம் அடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வடைந்து உள்ளது.  சீனா முழுவதும் 68 ஆயிரத்து 500 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவின் உகான் நகரில் இருந்து டெல்லி வந்த 406 பேர் சாவ்லா பகுதியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை போலீசாரின் பரிசோதனை மையத்தில் வைத்து தீவிரமுடன் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இதில் 406 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.  இதனை அடுத்து பரிசோதனை மையத்தில் இருந்து அவர்களை விடுவிப்பது பலகட்ட முறையில் நடைபெறும்.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்பேரில் உரிய மருத்துவ நடைமுறைகளின்படி 406 பேரும் நாளை விடுவிக்கப்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு; மாவட்டம் வாரியாக விவரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; மாவட்டம் வாரியாக விவரம் வருமாறு:
2. ஒருவரிடம் இருந்து 406 பேருக்கு கொரோனா தொற்று பரவும்-இந்திய மருத்துவ கவுன்சில்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில், ஒருவரில் இருந்து 406பேருக்கு கொரோனா தொற்று பரவும் என்று முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்திவரும் இந்தியா உள்பட நாடுகளில் கொரோனா வைரசால் இறப்பு விகிதம் 6 மடங்கு அளவுக்கு குறைவாக காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
4. அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை"- மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்
அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
5. ஊரடங்கை மீறி இன்று இரவு முஸ்லீம்கள் வெளியேவர வேண்டாம்- மத்திய மந்திரி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.இன்று ஊரடங்கை மீறி முஸ்லீம்கள் இரவு வெளியே வரவேண்டாம் என மத்திய மந்திரி கோரிக்கை வைத்துள்ளார் .

ஆசிரியரின் தேர்வுகள்...