தேசிய செய்திகள்

புலிகள் காப்பகத்தில் எருது ஒன்றுடன் மோதிய பெண் புலி உயிரிழப்பு + "||" + Tigress killed in fight with bison at Jharkhand reserve

புலிகள் காப்பகத்தில் எருது ஒன்றுடன் மோதிய பெண் புலி உயிரிழப்பு

புலிகள் காப்பகத்தில் எருது ஒன்றுடன் மோதிய பெண் புலி உயிரிழப்பு
ஜார்கண்டில் புலிகள் காப்பகத்தில் எருது ஒன்றுடன் சண்டையிட்ட பெண் புலி உயிரிழந்துள்ளது.
லத்தேகார்,

தேசிய விலங்கு என அறியப்படும் புலிகளை காப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வனவிலங்கு சரணாலயங்கள், காப்பகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  ஜார்கண்டின் லத்தேகார் மாவட்டத்தில் பலாமு புலிகள் காப்பகம் உள்ளது.  இங்குள்ள 16 வயதுடைய பெண் புலி ஒன்று எருது ஒன்றுடன் சண்டையிட்டு உள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அந்த புலி பின்னர் உயிரிழந்து விட்டது.  இதுபற்றி வனத்தின் களஇயக்குனர் தாஸ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, புலியின் நகம், பல் மற்றும் பிற உறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.