மக்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதற்கு ஆங்கிலேயர் கால சட்டங்களில் திருத்தம் தேவை - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு


மக்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதற்கு ஆங்கிலேயர் கால சட்டங்களில் திருத்தம் தேவை - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2020 4:53 AM GMT (Updated: 17 Feb 2020 4:53 AM GMT)

மக்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதற்கு ஆங்கிலேயர் கால சட்டங்களில் திருத்தம் தேவை என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

நாசிக், 

நாசிக்கில் மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் சார்பில் நேற்று ‘விரைவான நவீன நீதித்துறையை நோக்கி அணிவகுத்தல்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி புஷன் கவாய், மும்பை ஐகோர்ட்டு நீதிபதிகள் மாக்கரண்ட் கர்னிக், சந்தீப் ஷிண்டே, மந்திரி அனில் பரப் ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்கு பிறகும், ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள் இன்னும் உள்ளன. சமூகத்தின் தேவை மற்றும் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த சட்டங்களில் மாற்றங்கள் தேவை.

மக்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக சட்டத்தில் திருத்தங்கள் குறித்து சிந்திக்க ஜனநாயகத்தின் 4 தூண்களும் ஒன்றிணைய வேண்டும். ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் தோல்வி ஏற்பட்டால் குற்றங்கள் அதிகரிக்கும். நீதிமன்ற கட்டிடங்களுக்கும் பஞ்சம் ஏற்படும்.

சட்டங்களை விடவும் சமூகத்தில் நல்ல பண்புகளை வளர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story