தேசிய மக்கள் தொகை பதிவேடு ; கணக்கெடுப்பு பணிகள் ஏப்.1-ல் தொடங்குகிறது


Representation image
x
Representation image
தினத்தந்தி 18 Feb 2020 6:23 AM GMT (Updated: 18 Feb 2020 7:28 AM GMT)

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) திட்டத்துக்கான கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தேசிய மக்கள் தொகை பதிவேடு வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.  டெல்லியில், நாட்டில் முதல் குடிமகனான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து இந்த பணிகள் தொடங்க உள்ளன. 

அன்றைய தினமே துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் தகவல் பெற்று பதிவேட்டில் சேர்க்கப்பட உள்ளனர்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.3,941.35 கோடியை ஒதுக்கியுள்ளது .

Next Story