தேசிய செய்திகள்

பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு + "||" + Prashant Kishor questions Nitish Kumar's development model in Bihar

பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது என பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பாட்னா,

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின.

இந்த சட்டங்களுக்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் மற்றும் பீகார் முதல் மந்திரியான நிதிஷ்குமார் வெளிப்படையாக ஆதரவு வழங்கினார்.  ஆனால், அக்கட்சியின் துணை தலைவராக இருந்து வந்த பிரசாந்த் கிஷோர் இதற்கு எதிராக பேசி வந்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கவும், 2017ல் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் வெற்றி பெறவும், கடந்த ஆண்டு ஆந்திராவில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வரவும் வியூகங்கள் வகுத்து தந்தவர் கிஷோர்.

இதனிடையே, மத்திய அரசின் இந்த சட்டங்களுக்கு நிதிஷ்குமார் ஆதரவாக இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிஷோர் விமர்சனம் செய்தது அக்கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அக்கட்சியினர் கிஷோரை குற்றம் சாட்டி பேசினர்.  இந்த உட்கட்சி பூசலுக்கு இடையே, நிதிஷ்குமார் கடந்த ஜனவரி 28ல் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அமித் ஷா கட்சியில் சேர்க்கும்படி கூறியதனாலேயே கிஷோர் கட்சியில் சேர்க்கப்பட்டார் என கூறினார்.  ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த கிஷோர், நிதிஷை ஒரு பொய்யர் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து மறுநாள் அக்கட்சியில் இருந்து கிஷோர் நீக்கப்பட்டார்.  இதுபற்றி பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நன்றி நிதிஷ்குமார் அவர்களே.  பீகாரின் முதல் மந்திரியாக நீங்கள் பதவியை தக்க வைத்து கொள்ள எனது வாழ்த்துகள்.  கடவுள் உங்களுக்கு ஆசி வழங்கட்டும் என கிண்டலாக தெரிவித்தார்.

இந்த நிலையில், பீகாரின் பாட்னா நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கிஷோர் இன்று கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, பீகாரில் கடந்த 2005ம் ஆண்டில் இருந்தது போன்ற ஏழ்மை நிலை இன்றுவரை தொடர்கிறது.  கடந்த 15 வருடங்களில் பீகாரில் வளர்ச்சி உள்ளது.  ஆனால், அது அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சியை அடையவில்லை என கூறினார்.

பீகாரின் வளர்ச்சி பற்றிய புள்ளி விவரங்களுடன் திறந்த மன்றத்தில் அவருடன் விவாதிக்க தயார் என நிதிஷ்குமாருக்கு கிஷோர் சவால் விடுத்தும் உள்ளார்.  பீகாரின் முன்னேற்றத்திற்கு நிதீஷ் என்ன செய்துள்ளார் என்று மக்கள் கேட்கின்றனர்.  வரும் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றால் அவர் என்ன செய்திடுவார்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா மீது ஜெர்மனி பரபரப்பு குற்றச்சாட்டு: ‘2 லட்சம் முக கவசங்களை திருடிவிட்டது’
2 லட்சம் முக கவசங் களை திருடிவிட்டதாக அமெரிக்கா மீது ஜெர்மனி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளது.
2. காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது தனவேலு எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என்று தனவேலு எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
3. கொரோனா வைரசை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
கொரோனா வைரசை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
4. தகுதி நீக்க விவகாரத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தப்பிக்க வைக்க சபாநாயகர் முயற்சி பாலகிரு‌‌ஷ்ணன் குற்றச்சாட்டு
தகுதி நீக்க விவகாரத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தப்பிக்க வைக்க சபாநாயகர் முயற்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் குற்றம் சாட்டி உள்ளார்.
5. மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருவதாக, செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.