தேசிய செய்திகள்

பேருந்து நிலையத்தில் வாகனம் கிடைக்காததால் அரசு பஸ்சை திருடி சென்ற ஊழியர் + "||" + Unable To Find A Ride, Telangana Man Steals Bus

பேருந்து நிலையத்தில் வாகனம் கிடைக்காததால் அரசு பஸ்சை திருடி சென்ற ஊழியர்

பேருந்து நிலையத்தில் வாகனம் கிடைக்காததால் அரசு பஸ்சை திருடி சென்ற ஊழியர்
விகாராபாத்தில் வேலைபார்த்த ஒருவர் சொந்த ஊருக்கு செல்ல வாகனம் கிடைக்காததால் அரசு பஸ்சை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் விகராபாத்திலுள்ள பேருந்து நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், பணி முடிந்து ஊருக்கு செல்ல காத்திருந்தார். அப்போது அவ்வழியே எந்த பேருந்தும், வாகனங்களும் வரவில்லை.   ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அந்த ஊழியர் 

 அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்தை திருடி ஓட்டிச் சென்று தாம் செல்லும் இடம் வந்ததும், அதனை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பேருந்து காணாததை வைத்து விசாரித்து, இந்த திருட்டை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிமுடிந்து ஊர் செல்ல எந்த வண்டியும் கிடைக்காததால், அரசு பேருந்தை ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.