கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - ஐ.நா. சபை அறிவிப்பு


கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - ஐ.நா. சபை அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2020 3:35 AM GMT (Updated: 19 Feb 2020 3:35 AM GMT)

கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

இஸ்லாமாபாத், 

ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர், அந்த நாட்டின் எம்.பி.க்களை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அவர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி, இந்தியா உடனான கா‌‌ஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

அவரிடம் பாகிஸ்தான் எம்.பி.க்கள், தற்போது போர் பதற்றம் நிலவுகிற சூழ்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு பேச்சுவார்த்தையை மறுபடியும் தொடங்க முடியாது; இந்த பதற்றமான சூழ்நிலையில் ஐ.நா. சபை தலைமையின் பங்களிப்பு மிக முக்கியமானது என வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து அவர்களிடம், ‘‘நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு ஐ.நா. சபை மத்தியஸ்தரின் பங்கை வகிக்க முடியும்’’ என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.

ஆனால் கா‌‌ஷ்மீர் பிரச்சினையில், மூன்றாவது தரப்பினரின் தலையீட்டுக்கு இடமே இல்லை, இது பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்வுகாண வேண்டிய ஒன்று என்பது இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாடு ஆகும்.

Next Story