அதிக மதிப்பெண் கிடைக்க விடைத்தாளில் ரூ.100 இணையுங்கள் மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் அறிவுரை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 20 Feb 2020 5:36 AM GMT (Updated: 20 Feb 2020 5:36 AM GMT)

உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்க விடைத்தாளில் ரூ.100 இணைத்து விடுங்கள் என மாணவர்களிடையே பேசிய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.

லக்னோ: 

உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரிய (யுபிஎஸ்இபி) தேர்வுகள் மாநிலம் முழுவதும் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த 56 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.

லக்னோவிலிருந்து 300 கி.மீ தூரத்தில் உள்ள மவு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வர் பிரவீன் மால்  தேர்வுகளில் எவ்வாறு ஏமாற்றுவது மற்றும் மாநில அரசு விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை  எவ்வாறு மீறுவது என்பது குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார்.

அவர் பேசும் போது  

தேர்வு அறையில் நீங்கள் உங்களுக்குள்  பேசிக்கொள்ளலாம் மற்றும் காகிதங்களை பரிமாறிக்கொள்ளலாம் . உங்கள் அரசு பள்ளி தேர்வு மையங்களில் உள்ள ஆசிரியர்கள் எனது நண்பர்கள். நீங்கள் சிக்கிக் கொண்டாலும், யாராவது உங்களுக்கு ஒரு அறை அல்லது இரண்டு அறை  கொடுத்தாலும், பயப்பட வேண்டாம்.  தாங்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் எந்த பதில்களையும் விட வேண்டாம். விடைத்தாளில் ரூ. 100 -யை மட்டும்  இணைத்து விடுங்கள் ஆசிரியர்கள் கண்மூடித்தனமாக உங்களுக்கு மதிப்பெண்கள் கொடுப்பார்கள். ஒரு கேள்விக்கு நீங்கள் தவறாக பதிலளித்தாலும், அது நான்கு மதிப்பெண்களுக்கு, பதில்  உங்களுக்கு மூன்று மதிப்பெண்களைக் கொடுக்கும் என கூறி உள்ளார்.

இதை  மாணவர்களில் ஒருவர் தனது மொபைல் போனில் ரகசியமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இது வைரலானதால்  பள்ளி முதல்வர் நேற்று  கைது செய்யப்பட்டார்.

Next Story