தேசிய செய்திகள்

1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு + "||" + Muslims Should Have Been Sent To Pakistan In 1947, Says Union Minister

1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு

1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க  வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு
முஸ்லீம்களை 1947-ல் பாகிஸ்தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ்சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா, 

சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போனவர் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். முஸ்லீம்களுக்கு எதிராக அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.  

அந்த வகையில்,  முஸ்லீம்களை 1947-லேயே பாகிஸ்தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று கூறி கிரிராஜ் சிங்  கூறியுள்ளார்.  

பீகாரின் புர்னியா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கிரிராஜ் சிங் கூறியதாவது ;- “1947 ஆம் ஆண்டுக்கு முன்பு  முகம்மது அலி ஜின்னா இஸ்லாமிய நாட்டுக்காக அழுத்தம் கொடுத்தார்.  நமது முன்னோர்கள் செய்த மிகப்பரிய தவறு அது. 

இதற்கான விலையை தற்போது நாம் கொடுத்து வருகிறோம்.  அந்த நேரத்தில், முஸ்லீம் சகோதரர்களை அங்கு(பாகிஸ்தான்) அனுப்பி விட்டு, நமது இந்துக்களை இங்கு கொண்டு வந்திருந்தால், இப்படியான ஒரு சூழலில் நாம் இருந்திருக்க மாட்டோம்” என்றார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கிரிராஜ் சிங்கின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. "உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்” ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு
கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது.
2. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி - பாகிஸ்தான் ஊடகங்கள்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி அடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறி உள்ளன.
3. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு: தனிமைப்படுத்தும் வசதிகளில் அலட்சியம்
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் எல்லை தனிமைப்படுத்தும் வசதிகளில் அலட்சியம் காட்டுவது கவலை அளிக்கிறது.
4. தெற்கு ஆசியாவில் 487 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு
பாகிஸ்தானில் 247 பேர் உள்பட தெற்கு ஆசியாவில் 487 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12.5 கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுஆயுத போர் மூண்டால் 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள் பலியாவார்கள் முனிச் பாதுகாப்பு அறிக்கை தெரிவித்து உள்ளது.