தேசிய செய்திகள்

டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு + "||" + Trumpeting Indo-US Energy Entente

டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப் வருகிற 24-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார்.  டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார்.  வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார்.  அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார்.

டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா-அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. டொனால்டு டிரம்ப்  25 ஆம் தேதி பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த நிலையில் டிரம்ப்பின் வருகையையொட்டி 5 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது  தொடர்பாக  டிரம்ப்புடன் வருகை தரும் அமெரிக்காவின் வர்த்தகக் குழுவினருடன்  வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது குறித்து நிருபர்களிடம்  பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் அறிவுசார் சொத்துரிமை, வர்த்தகம், உள்நாட்டு பாதுகாப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளும் டிரம்ப் -மோடி சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா
அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.
2. அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அதிக உயிர் இழப்பு ஏற்படும்- டொனால்டு டிரம்ப்
அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அதிக உயிர் இழப்பு ஏற்படும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.
3. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்
ஜோ பிடனுக்கு வழிவிட்டு 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்
4. அயர்லாந்து பிரதமருக்கு இந்திய முறையில் வணக்கம் தெரிவித்த டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது, கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்டுள்ளார்.
5. இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் கைவண்ணத்தில் ஜொலித்த இவான்கா டிரம்ப்
இந்திய பயணத்தின் போது இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் கைவண்ணத்தில் இவான்கா டிரம்ப் ஜொலித்தார்