தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ஜூன் மாதம் வரை தொடர்ந்து சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருக்கும் + "||" + Pak stays on FATF grey list, sees June deadline on terror, could slip into black list after June

பாகிஸ்தான் ஜூன் மாதம் வரை தொடர்ந்து சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருக்கும்

பாகிஸ்தான் ஜூன் மாதம் வரை தொடர்ந்து சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருக்கும்
பாகிஸ்தான் ஜூன் மாதம் வரை தொடர்ந்து சர்வதேசநிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருக்கும் அதன் பிறகு கருப்பு பட்டியலில் சேரக்கூடும்.
பாரீஸ்

பாரீசில் நடைபெற்று வரும்  சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) கூட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை  தாக்கல் செய்தது 

சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அளித்திருந்த 27 பரிந்துரைகளில் 14 அம்சங்கள் மட்டும்  நிறைவேற்றப்பட்டுள்ளது, 11 அம்சங்கள் ஓரளவு நடைமுறைப்படுத்தியுள்ளது.

தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க பாகிஸ்தான் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது.   இதில் 205 நாடுகள் மற்றும் அதிகார வரம்புகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு சாம்பல் பட்டியல் ஜூன் மாதம் வரை  நீடிக்கும் என்று கூறி உள்ளது. அதன்பிறகு   ஜூன் மாதத்திற்குப் பிறகு கருப்பு பட்டியலில் நழுவக்கூடும்

பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதிலும் அபராதம் விதிப்பதிலும் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணவில்லை என்பது சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவுக்கு கவலை அளிக்கிறது. ஜூன் மாதத்திற்குள் பாகிஸ்தான் நம்பகமான நடவடிக்கை எடுக்கத் தவறினால், அதன் உறுப்பினர்களை அழைத்து  எச்சரிக்கபடும் என்று சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு கூறி உள்ளதுடன் பாகிஸ்தானுடனான வணிக உறவுகள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த அவர்களின் நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு அனைத்து அதிகார வரம்புகளையும் வலியுறுத்தி உள்ளது.

குறிப்பாக,எட்டு  பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க பாகிஸ்னைசர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு பிப்ரவரி மாதத்தில் சாம்பல் பட்டியலில் இருந்து  வெளியேறறி விடலாம் என்று அதன் மக்களுக்கு உறுதியளித்திருந்தன. சீனா, மலேசியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளுடன் பாகிஸ்தான் தடுப்புப்பட்டியலில் இருந்து விலகி இருந்தது. ஆனால் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேற, பாகிஸ்தானுக்கு அதன் முயற்சிகளுக்கு உறுதியளிக்க 13 நாடுகள் தேவைப்பட்டன. பாகிஸ்தான் கடுமையாக வற்புறுத்தியது, பல நாடுகள் அதற்கு ஆதரவாக பேசின. ஆனால் ஆதரவளிக்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
2. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.
3. கொரோனா பாதிப்பு : இந்தியாவைப் போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது- இம்ரான் கான்
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போல் தன்னால் செயல்பட முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்.
4. பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 தொழிலாளர்கள் சாவு
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
5. பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்துள்ளது.