தேசிய செய்திகள்

‘டிரம்ப்’ கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு - அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு + "||" + Water shortage in Trump's village - call for US president

‘டிரம்ப்’ கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு - அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு

‘டிரம்ப்’ கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு - அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு
‘டிரம்ப்’ கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சண்டிகார்,

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சமூக சேவை நிறுவனமான சுலப் இண்டர்நேஷனல் சார்பில், திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற் கொண்டபோது அதை அரியானா மாநிலத்தில் உள்ள மரோரா கிராமம் பெற்றது. 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும், டிரம்பும் முதல் முறையாக அமெரிக்காவில் சந்தித்தபோது இந்த சிறப்பை மரோரா பெற்றதால், அதன் நினைவாக டிரம்ப் என அந்த கிராமத்துக்கு பெயரிடப்பட்டது. அன்று முதல் இந்த கிராமத்தில் உள்ள விதவைகளுக்கும், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பல வண்ணங்களில் கழிவறைகள் கட்டப்பட்டன.

தற்போது அந்த கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, கழிவறைகள் பயன்பாடற்று காணப்படுகின்றன. எனவே தற்போது இந்தியாவுக்கு வரும் டிரம்ப் தங்கள் கிராமத்துக்கு வருகை தந்து தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைப்பாரா? என அப்பாவியாக அந்த கிராம மக்கள் கேட்கின்றனர்.