தேசிய செய்திகள்

மராட்டியத்தில் என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவோம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு கூட்டணி உரசல்! + "||" + Maharashtra will go ahead with CAA, NPR, says Uddhav Thackeray after meeting PM Modi

மராட்டியத்தில் என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவோம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு கூட்டணி உரசல்!

மராட்டியத்தில்  என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவோம்  உத்தவ் தாக்கரே அறிவிப்பு கூட்டணி உரசல்!
மராட்டியத்தில் என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவோம் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்ததை தொடர்ந்து காங்கிரஸ் சிவசேனா இடையே வெடித்தது கூட்டணி உரசல்!
மும்பை

மராட்டிய மாநிலத்தில்  குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய மக்கள்தொகை பதிவேடும்   அமல்படுத்துவோம் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் சிவசேனா கூட்டணி இடையே  உரசல் வெடித்து உள்ளது. 

மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதைத் தொடர்ந்து அவர் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்தும் பிரதமருடன் விவாதித்தேன். குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்றும், தேசிய மக்கள்தொகை பதிவேடு யாரையும் நாடற்றவர்களாக ஆக்கிவிடாது.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருப்பதாகவும், என்ஆர்சி-யை செயல்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மோடி தெளிவுபடுத்தி உள்ளார்.

மராட்டிய  ஆளுங் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் சிஏஏ, என்பிஆரை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் உத்தவ் தாக்கரே அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதனால் ஆளுங்கூட்டணியில் உரசல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் கூட்டணிக் கட்சிகளிடையே உரசல் ஏதும் இல்லை என்றும், அரசை 5 ஆண்டுகளுக்கு நடத்துவோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.