தேசிய செய்திகள்

ஆமதாபாத்தில் டிரம்புக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன? - சமையல் கலை நிபுணர் விளக்கம் + "||" + What are the foods offered to Trump in Ahmedabad? - culinary arts expert interpretation

ஆமதாபாத்தில் டிரம்புக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன? - சமையல் கலை நிபுணர் விளக்கம்

ஆமதாபாத்தில் டிரம்புக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன? - சமையல் கலை நிபுணர் விளக்கம்
ஆமதாபாத்தில் டிரம்புக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து சமையல் கலை நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆமதாபாத்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோருடன் 2 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகிறார். ஆமதாபாத்தில் வந்திறங்கும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலையில் ஆக்ரா புறப்படுகிறார்.


ஆமதாபாத்தில் தங்கியிருக்கும்போது டிரம்புக்கு வழங்கப்படும் உணவுகளை, அங்குள்ள பார்ச்சூன் லேண்ட்மார்க் ஓட்டலில் பணியாற்றும் புகழ்பெற்ற சுரேஷ் கண்ணா என்ற சமையல் கலை நிபுணர் தலைமையிலான குழுவினர் தயாரிக்கின்றனர். அந்தவகையில், குஜராத்தின் புகழ்பெற்ற உணவுப்பொருளான ‘காமன்’ மற்றும் பிரக்கோலி, சோள சமோசா, காஜு கத்லி, பலவகையான தேநீர் என விதவிதமான பதார்த்தங்களை தயாரித்து டிரம்புக்கு வழங்குவதாக சுரேஷ் கண்ணா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘நாளை (இன்று) எங்கள் ஓட்டலுக்கு மிகவும் முக்கியமான தினமாகும். டிரம்ப் மற்றும் அவருடன் வரும் விருந்தினர்களுக்கு வழங்குவதற்காக கிரீன் டீ, லெமன் டீ உள்ளிட்ட உயர்ந்த ஒரு தேநீர் பட்டியலை நாங்கள் தயாரித்து உள்ளோம். ‘காமன்’ என்பது குஜராத்தின் புகழ்பெற்ற உணவு. இதை நாங்கள் லேசான ஆவியில் வேகவைத்து டிரம்புக்கு வழங்குவோம்’ என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பு அடுத்த 2 வாரங்களில் அதிக அளவில் இருக்கும்: டிரம்ப்
அமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்ச நிலையை எட்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
2. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக ஜி ஜின்பிங்குடன் டிரம்ப் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
3. ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை : டிரம்ப் அறிவிப்பு
ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பை எதிர்த்து களமிறங்கப்போவது யார்?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்பை எதிர்த்து களமிறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
5. தாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன? - சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்கள்
தாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன என்பது குறித்து சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்கள் தெரிவித்துள்ளார்.