தேசிய செய்திகள்

தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம் + "||" + Father and son are married on the same stage

தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்

தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்
தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.
ராஞ்சி, 

ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமாகாமல் ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதியினர் 30 வருடங்களுக்கும் மேலாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகன் இருக்கிறார். மகன் ஜித்தீசும் திருமணம் செய்யாமலே அருணா என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் திருமணம் செய்யாமல் இருப்பதால் தொண்டு நிறுவனம் ஒன்று தங்களுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தது. அதன்படி தந்தை மற்றும் மகன் இருவருக்கும் ஒரே மேடையில், ஒரே நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஸ்டோக்ஸ் ஆடுவது சந்தேகம்
தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஸ்டோக்ஸ் ஆடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
2. தந்தை, மருமகன் கொடூர கொலை: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு
புதுவையில் தந்தை, மருமகனை கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
3. சொத்து தகராறில் தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு - அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் கைது
பாளையங்கோட்டையில் சொத்து தகராறில் தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய வழக்கில், அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. தந்தையின் கடின உழைப்பால் ஜூனியர் அணியின் கேப்டன் ஆகியிருக்கிறேன் - பிரியம் கார்க் பேட்டி
இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் பதவி, தனது தந்தையின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று பிரியம் கார்க் கூறினார்.
5. டெல்லி அருகே மகன், மகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை
டெல்லி அருகே மகன், மகளை கொன்று விட்டு, தம்பதி 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.