ஷாகீன் பாக் போராட்டம் ; உச்ச நீதிமன்றத்தில் சமரசக் குழு அறிக்கை தாக்கல்


ஷாகீன் பாக் போராட்டம் ; உச்ச நீதிமன்றத்தில் சமரசக் குழு அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 24 Feb 2020 9:11 AM GMT (Updated: 24 Feb 2020 9:11 AM GMT)

ஷாகீன் பாக் போராட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட சமரசக்குழு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் சுமார் 100 நாட்களாக முற்றுகை போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சமரசக்குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்து உள்ளது. மூத்த வக்கீல்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட இந்த குழுவினர் ஷாகீன்பாக் போராட்டக்காரர்களுடன் இரண்டு  முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

அப்போது இந்த போராட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு அங்கீகரித்து இருப்பதாகவும், ஆனால் இந்த போராட்டத்தால் மற்ற குடிமக்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என அறிவுறுத்தி இருப்பதாகவும் போராட்டக்காரர்களிடம் அவர்கள் எடுத்துரைத்தனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சாதனா ராமச்சந்திரன், சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்.  

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சமரசக்குழு தாக்கல் செய்த அறிக்கை மனுதாரர்கள் உள்பட எந்த தரப்புடனும்  பகிர்ந்து கொள்ளப்படமாட்டாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். 

Next Story