குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்: டெல்லியில் வன்முறை - போலீஸ்காரர் பலி ; துப்பாக்கி சூடு


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்: டெல்லியில் வன்முறை - போலீஸ்காரர் பலி ; துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 24 Feb 2020 10:55 AM GMT (Updated: 24 Feb 2020 10:55 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் டெல்லியில் வன்முறை ஏற்பட்டது, இதில் போலீஸ்காரர் ஒருவர் பலியானர் துப்பாக்கி சூடு நடைபெற்றது.

புதுடெல்லி

டெல்லியின் யமுனா விஹார் பகுதியில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீஸ் தலைமைக்காவலர்  ரத்தன்லால் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  ரத்தன்லால்  கோகுல்புரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இதை தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில்  10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி சில மணி நேரங்களில் டெல்லிக்கு வரவுள்ள நிலையில் டெல்லியில் வன்முறை ஏற்பட்டு உள்ளது.

Next Story