தேசிய செய்திகள்

பிரதமர் மோடி கடுமையானவர் ; அமெரிக்க அதிபர் டிரம்ப் + "||" + Everybody Loves Him, But He's Very Tough": Trump On PM Modi

பிரதமர் மோடி கடுமையானவர் ; அமெரிக்க அதிபர் டிரம்ப்

பிரதமர் மோடி  கடுமையானவர்  ;   அமெரிக்க அதிபர் டிரம்ப்
வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக, டிரம்ப், சமீப காலங்களில் 2-வது முறையாக கூறியுள்ளார்.
புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 36 மணி நேர சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்த கூட்டத்தில் இரு தலைவர்களும் உரையாற்றினர். இந்தக்கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப் தனது பேச்சின் நடுவே, இந்திய பிரதமர்  மிகப்பெரும் தலைவர் அனைவருக்கும் அவரை பிடிக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு அவர் மிகவும் கடுமையானவர் என்று குறிப்பிட்டார்.  

டிரம்ப் குறிப்பிடுகையில், “ இந்தியா - அமெரிக்கா இடையே மிகவும் விரிவான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். அமெரிக்க ஏற்றுமதிக்கு மிகப்பெரும் சந்தையாக இந்தியா உள்ளது. ஏற்றுமதியில் இந்தியாவுக்கு மிகப்பெரும் சந்தையாக அமெரிக்காவும் இருக்கிறது.  

எனவே, வலுவான அமெரிக்கா இந்தியாவுக்கு சிறந்தது. விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்படுத்துவோம். தற்போது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது.  பிரதமர் மோடி,  பேச்சுவார்த்தைக்கு மிகவும் கடினமானவர் “ என்றார்.  வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக 2-வது முறையாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
2. மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும் - ஜெய்ராம் ரமேஷ் சொல்கிறார்
மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
3. தொலைபேசியில் அழைத்து பேசினார் பிரதமர் மோடியுடன் டிரம்ப் அவசர ஆலோசனை
கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியாவும், அமெரிக்காவும் கொரோனா வைரசுக்கு எதிராக முழு பலத்தையும் பயன்படுத்த ஒப்புக்கொண்டன.
4. நாளை இரவு எல்லா மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைப்பதால் மின்தொகுப்பு பாதிக்கப்படாது-மத்திய மந்திரி
நாளை இரவு எல்லா மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைப்பதால் மின்தொகுப்பு பாதிக்கப்படாது என மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
5. விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி - கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி வேண்டுகோள்
தெண்டுல்கர், கங்குலி, டோனி, விராட்கோலி, விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து உள்பட 40-க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...