தேசிய செய்திகள்

ஆக்ராவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி வந்தடைந்தார் + "||" + Trump arrives in Delhi for last leg of his India visit

ஆக்ராவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி வந்தடைந்தார்

ஆக்ராவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி வந்தடைந்தார்
ஆக்ராவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெல்லி வந்தடைந்தார்.
புதுடெல்லி,


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,  குஜராத் பயணத்தை முடித்துக்கொண்டு, தாஜ்மகாலை பார்ப்பதற்காக ஆக்ரா வந்தார். 

ஆக்ரா விமான நிலையம் வந்தடைந்த  டிரம்ப் மற்றும் அவரது மனைவில் மெலனியா டிரம்ப் உள்ளிட்டோரை  உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 3 ஆயிரம் கலைஞர்கள் திரண்டு இசை இசைத்து, நடனமாடி டிரம்பை வரவேற்றனர். 

பின்னர் தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் உள்ளிட்டோர் சுற்றிபார்த்தனர். டிரம்ப்பும், அவரின் மனைவி மெலானியாவும் தாஜ்மஹால் நடைபாதையில் கை கோத்து நடந்து அதன் அழகை ரசித்தனர். தாஜ்மஹாலின் பெருமைகள், வரலாற்றுச் சிறப்புகள் ஆகியவை குறித்து டிரம்ப்புடன் வந்த மொழிபெயர்ப்பாளர் விளக்கிக் கூறினார்.

இதையடுத்து, ஆக்ராவில் இருந்து தனது பிரத்யேக விமானம் மூலம் டெல்லிக்கு டிரம்ப்  புறப்பட்டார். டெல்லி வந்த டிரம்பை  மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து நேராக ஐடிசி மயூரா ஹோட்டல் சென்ற  டிரம்ப், இரவு அங்கு தங்குகிறார். நாளை காலை  ராஷ்டிரபதி பவன் செல்லும் டிரம்ப், பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். 

முன்னதாக, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில்,  பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் டிரம்ப் ஈடுபடுகிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத்தெரிகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
2. கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன், பிரதமர் இன்று ஆலோசனை
கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன், பிரதமர் இன்று ஆலோசனை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
3. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி
ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5. ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.