தேசிய செய்திகள்

டிரம்ப் விருந்து நிகழ்ச்சி; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்கப்போவதாக தகவல் + "||" + Former PM Manmohan Singh To Skip Banquet For Donald Trump Tomorrow

டிரம்ப் விருந்து நிகழ்ச்சி; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்கப்போவதாக தகவல்

டிரம்ப் விருந்து நிகழ்ச்சி; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்கப்போவதாக தகவல்
ஜனாதிபதி மாளிகையில் நாளை நடைபெறும் டிரம்பிற்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கவுரவமளிக்கும் விதமாக நாளை (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வ விருந்தளிக்கிறார். 

இந்த விருந்தில் கலந்து கொள்ள வருமாறு  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு ஜனாதிபதி மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. 

ஆனால், இந்த விருந்தில் கலந்து கொள்ள முடியாது என  மன்மோகன் சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடல் நலம் காரணமாக பங்கேற்க முடியாது என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

எனினும் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி இந்த விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

 மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் விருந்தை புறக்கணிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும்; டிரம்ப் சூசகம்
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
2. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3. டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை: முடிவு என்ன?
டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையின் முடிவு என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
4. டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேச்சு
டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேசினார்.
5. டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா? - அவரே அளித்த பதில்
டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா செய்யப்பட்டது குறித்து, அவரே பதில் அளித்துள்ளார்.