தேசிய செய்திகள்

டெல்லியில் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது - மத்திய அரசு குற்றச்சாட்டு + "||" + Violence planned in Delhi - Central government indictment

டெல்லியில் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது - மத்திய அரசு குற்றச்சாட்டு

டெல்லியில் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது - மத்திய அரசு குற்றச்சாட்டு
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியின் யமுனா விஹார் பகுதியில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீஸ் தலைமைக்காவலர் ரத்தன்லால் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்கள், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகையையொட்டி திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் குற்றம் சாட்டின. இதன் மூலம், சம்பந்தப்பட்டவர்கள் விளம்பரம் பெற திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லி போலீஸ் கமி‌ஷனர் அமுல்யா பட்நாயக், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகிறார்.

இதற்கிடையே டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட மத்திய உள்துறை செயலாளரான அஜய் குமார் பல்லா, “தற்போது மூத்த அதிகாரிகள் களத்தில் உள்ளனர். போதுமான அளவில் பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்று தெரிவித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி வன்முறை; உளவு பிரிவு அதிகாரி படுகொலை வழக்கில் கூடுதலாக 5 பேர் கைது
டெல்லி வன்முறையில் உளவு பிரிவு அதிகாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கூடுதலாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. டெல்லி வன்முறை: ‘சட்டத்தின்பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது’ - அமித்ஷா திட்டவட்டம்
டெல்லி வன்முறையில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
3. டெல்லி வன்முறை: 690 வழக்குகள் பதிவு
டெல்லியில் கலவரம் தொடர்பாக 690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
4. டெல்லி வன்முறை விவகாரம் ; 2 மலையாள சேனல்களுக்கு 48 மணி நேரம் தடை
டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான ஒளிபரப்பு மூலமாக சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததாக இரண்டு மலையாள செய்தி சேனல்களுக்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. டெல்லி வன்முறை: ஈரான் மூத்த தலைவர் கண்டனம்
டெல்லி வன்முறை ஈரான் மூத்த தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா - ஈரான் உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.