டொனால்டு டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா


கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா
x
கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா
தினத்தந்தி 25 Feb 2020 12:53 AM GMT (Updated: 25 Feb 2020 12:53 AM GMT)

டொனால்டு டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா கலந்து கொள்கிறார்.

பெங்களூரு,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்தார். ஆமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்ற கூட்டத்தில் டிரம்ப் பேசினார். அதற்கு முன்பு அவர் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். 

அதைத்தொடர்ந்து டிரம்ப், ஆக்ராவுக்கு சென்று உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்த்து மகிழ்ந்தார். பிறகு அவர் டெல்லி சென்று நேற்று இரவு தனியார் சொகுசு ஓட்டலில் தங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடி உள்பட மத்திய மந்திரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் இதில் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட பல்வேறு மாநிங்களின் முதல்-மந்திரிகளுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் எடியூரப்பா பட்ஜெட் தயாரிப்பு பணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியது. இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று காலை டெல்லிக்கு விமானம் மூலம் எடியூரப்பா புறப்பட்டுச் செல்கிறார்.

Next Story