தேசிய செய்திகள்

டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை + "||" + A meeting was held by Home Minister Amit Shah late last night with senior Delhi Police officers

டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை
டெல்லியில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை மூத்த அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,

வடகிழக்கு டெல்லி ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

வன்முறை கும்பல் கல்வீசியதில் போலீஸ் துணை கமிஷனர் அமித் சர்மாவுக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பல போலீசாரும் காயம் அடைந்தனர். காயமடைந்த போலீசார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ் ஏட்டு ரத்தன்லால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  5 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், டெல்லி சட்டம் ஒழுங்கு நிலை  தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நள்ளிரவு டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இதற்கிடையே, வடகிழக்கு டெல்லியில் நிலைமை மிகவும் பதற்றமாக இருப்பதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  டெல்லி காவல் ஆணையர் சீலம்பூர் டிசிபியை நேற்று இரவு சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். 


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சிக்கு அமித் ஷா கண்டனம் - ‘கொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா?’
கொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியல் நடத்துவதா என கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் ; டெல்லி காவல்துறை வேண்டுகோள்
டெல்லியில் சில இடங்களில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதாக தகவல் பரவியதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
3. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்பவே மதவாத அரசியல் செய்கிறார்கள் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்ப மதவாத அரசியல் செய்வதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. பூரி ஜெகநாதர் கோவிலில் அமித்ஷா வழிபாடு
பூரி ஜெகநாதர் கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வழிபாடு செய்தார்.
5. டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய சோனியா காந்தி போர்க்கொடி
டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவர் விமர்சித்தார்.