தேசிய செய்திகள்

டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் + "||" + Delhi Police sources: Shahrukh, the man in a red t-shirt who opened fire at police during violence in North East Delhi yesterday

டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்

டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு  நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்
டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று  இரண்டாவது நாளாக ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது.  இந்த வன்முறையில், ஒரு தலைமைக்காவலர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.  60-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதனால் இங்கு பதட்டம் நிலவுகிறது. மேலும் வன்முறை பரவாமல் தடுக்க கூடுதல் போலீசார் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் வாலிபர் ஒருவர்  வானத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டார். மேலும், காவல் துறையினரையும், சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த அந்த நபர் மிரட்டினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது. 

இதையடுத்து, கைத்துப்பாக்கியுடன் வலம் வந்த அந்த நபர் யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து தேடி வந்தனர். இந்நிலையில் ஷாரூக் என்ற நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 33 வயது கொண்ட தாடி வைத்து காணப்படும் இந்த நபருக்கு துப்பாக்கி எப்படி வந்தது ? இவருக்கு பயங்கரவாத அமைப்புகளிடம் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில், கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
2. டெல்லி சென்று திரும்பிய 15 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களில் 15 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
3. டெல்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்று, 5 ரெயில்களில் ஊர் திரும்பியவர்களை கண்டறியும் பணி தீவிரம்
டெல்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்று, 5 ரெயில்களில் ஊர் திரும்பியவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
4. டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு; அரசு மருத்துவமனை மூடப்பட்டது
டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.