தேசிய செய்திகள்

மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம் + "||" + Elections for 55 Rajya Sabha seats to be conducted on March 26

மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்

மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்
மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி

17 மாநிலங்களை சேர்ந்த 55 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  55 மாநிலங்களவை இடங்களுக்கான வாக்குப்பதிவு மார்ச் 26 ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் 

17 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 55  மாநிலங்களவை  உறுப்பினர்களின் பதவிக் காலம் 2020 ஏப்ரலில் முடிவடைகிறது. 

தேர்தலுக்கான அட்டவணைப்படி, மார்ச் 6 ம் தேதி தேர்தல் குறித்த  அறிவிப்பு வெளியிடப்படும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 13 ஆகும்.  வாக்குப்பதிவு மார்ச் 26 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அதே நாளில். மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என கூறி உள்ளது.

தமிழகத்தில் திருச்சி சிவா (திமுக), சசிகலா புஷ்பா , விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ் (அதிமுக), ரங்கராஜன் (சிபிஎம்) ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது.

தமிழக சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள்.

இந்த பதவியை பிடிக்க  இப்போதே அதிமுக, திமுக  கட்சிகளில் போட்டி தொடங்கி விட்டது.